தோனியின் சேப்பாக்கம் கணக்கு மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸை காப்பாற்றியிருக்கிறது. ஸ்பின்னே பலம் என மூன்று ஸ்பின்னர்களுடன் தோனி களமிறங்க, முஜிபுர் ரகுமானை வெளியே உட்காரவைத்துவிட்டு இரண்டு ஸ்பின்னர்களுடன் வந்தார் அஷ்வின். ரிசல்ட் சென்னைக்கு சாதகமானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்